எல்லாரும் போராடுறாங்க! எதுக்கு இந்த விளம்பரம் ஆட்சி? விளாசிய TTV
திமுக ஆட்சியை விளம்பரம் மட்டும் தான் செய்கிறார்கள் என்றும் மக்கள் போராடக்கூடிய நிலைமைதான் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திராவிட மாடல் ஆட்சி என்று திமுக விளம்பரம் மட்டும் தான் படுத்திக் கொள்வதாகவும் அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே சாலைக்கு வந்த போராடக்கூடிய நிலைமைதான் இருப்பதாக கூறினார்.
சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த மோசமான ஆட்சி இந்த திமுக ஆட்சி தான் என்று தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு சரியில்லாத, யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத, போதை மருந்துகள் பெருகி, ஐந்தாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் கூலிப்படைகள் கொலை செய்கின்ற ஆட்சியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
விண்ணை மட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கின்ற அளவுக்கு திமுக ஆட்சி இருப்பதாக தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக திமுக ஆட்சி வீழ்த்தப்படும் என்று உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: #2026 ELECTION: ADMK கூட கூட்டணி? அதிரடி முடிவை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!
தொடர்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட போலி வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை குறிப்பிட்டு பேசிய டிடிவி தினகரன், எப்போதுமே தோற்றுப் போனவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டு இதுதான் என்று தெரிவித்தார். இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அந்த முகவரியில் இருப்பதாகவும், அவர்கள் அங்கு வாக்குரிமை பெற்று உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
அதைப்போல மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்கு வேலை செய்வதாகவும் அங்கு அவர்களுக்கு வாக்குரிமை இல்லாத பட்சத்தில் இங்கு வாக்களிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ரெண்டு EPIC நம்பர் இருந்தா யார் தப்பு? நியாயத்த சொல்லுங்க! தேஜஸ்வி யாதவ் கேள்வி..!