#BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி முடிவு குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் irundhathu அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. அமமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் தஞ்சாவூரில் நடைபெற்றன. அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவெடுக்கும் முழு அதிகாரமும் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டது.
கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட அணியையும் குறிப்பிடாமல், "ஆட்சியில் பங்கு தரும் கூட்டணிக்கு செல்வோம்" என்ற நிலைப்பாட்டை தினகரன் வலியுறுத்தினார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், அமமுக நிச்சயம் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன்மூலம், வெறும் ஊடகக் கவனத்துக்காக அல்லாமல், மக்கள் நலன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதை வலியுறுத்தினார்.
இருப்பினும், அமமுக கட்சி இன்னும் எந்த அணியுடனும் உறுதியான ஒப்பந்தத்தை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து, பின்னர் விலகி உள்ளது. 2025 செப்டம்பரில் என்டிஏவிலிருந்து விலகியது, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் என்டிஏ தலைமையிலிருந்து மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
இதையும் படிங்க: ஆண்டுதோறும் கட்டண கொள்ளை... வாட்டி வதைக்கும் வசூல் வேட்டை..! TTV தினகரன் காட்டம்..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ பொதுக்கூட்டத்தில் ஜனவரி 23 அன்று அமமுக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. டிடிவி தினகரன் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன், மீண்டும் என் டி ஏ கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். நல்ல ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயணிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். விட்டுக்கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்றும் டி டி வி தினகரன் கூறியுள்ளார். மக்கள் விரும்பும் நல்லாட்சியை கொடுப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க மக்கள் பணி தொடரனும்... செங்கோட்டையனுக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து...!