மீண்டும் பாஜக கூட்டணியில் அமமுக... ஆனா பாஜகவிற்கு டிடிவி தினகரன் போட்ட 3 முக்கிய கன்டிஷன்கள்...!
என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி உள்ள அமமுக மீண்டும் கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார். டிடிவி தினகரன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு அவரை பாஜகவை சார்ந்த பல்வேறு முக்கிய நபர்கள் தொடர்பு கொண்டு குறிப்பாக அண்ணாமலை உள்ளிட்டவர்கள் நேரடியாகவே அவரை தொடர்பு கொண்டு கூட்டணிக்கு மீண்டும் வர வேண்டும். இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த பொழுது கை கொடுத்தவர்கள் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தான், எனவே நீங்கள் இந்த கூட்டணிக்கு அவசியம் வர வேண்டும், தங்களுடைய முடிவை மதிப்பு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை நேரடியாக வலியுறுத்தி இருந்தார்.
மீண்டும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தற்பொழுது பாஜகவிற்கு டிடிவி தினகரன் வைத்திருக்கிறார். துரோகத்தை தூக்கி நாங்கள் சுமக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கும் விதமாக கருத்து சொல்லி இருக்கிற டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அதிமுகவிற்கு எதிராக உருவான கட்சி, அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உருவான கட்சி அப்படி இருக்கும் பொழுது நாங்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று முன்மொழிந்து எவ்வாறு தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியும், எனவே நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றாக அதிமுகவில் இருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தால் மட்டுமே நாங்கள் கூட்டணிக்கு வருவோம் எனக்கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக எங்களுடன் பாஜக கலந்தாலோசிக்க வேண்டும் என்கின்ற மூன்று முக்கியமான நிபந்தனைகளை பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் விதித்திருக்கிறார். ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், பாஜகவை நோக்கி இந்த நிர்பந்தங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் டிடிவி தினகரன் விதைத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: திமுகவை துரத்தனும்… எங்க நிலைப்பாடு ஒன்னு தான்! - நயினார் நாகேந்திரன்
மிக முக்கியமாக அவர் சொல்லி இருக்கக்கூடிய இந்த வார்த்தைகளில், அதிமுகவினுடைய மூத்த நிர்வாகிகள் என்ற ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக டிடிவி தினகரன் உச்சரித்திருக்கின்றார். அதாவது அதிமுகவினுடைய மூத்த நிர்வாகிகள் தங்களுக்குள் ஆலோசித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றாக ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அவர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய முதலமைச்சர் வேட்பாளர் என முன்னிருந்த வேண்டும். அப்போது தான் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் திருந்த வாய்ப்பே இல்ல… கூட்டணியை கையாள தெரியாத நயினார்! சாட்டையை சுழற்றிய டிடிவி