×
 

“வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!

வீணா போனவர்களைப் பற்றி பேச சொல்லாதீர்கள், ஓபிஎஸ் குறித்து தொண்டர்கள் பேச சொன்னதற்கு டிடிவி தினகரன் கோபம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெரியகுளம் பகுதியில் லட்சுமிபுரம் பெரியகுளம், வடுகபட்டி சில்வார்பட்டி, ஜெயமங்கலம் குள்ளபுரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  பரப்புரையில் மேற்கொண்டார்.

இதில் இறுதியாக கெங்குவார்பட்டி பகுதியில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தை துவக்கி ஓபிஎஸ் குறித்து பேசிய போது மைக் சரியாக வேலை செய்ததால் பிரச்சாரத்தை நிறுத்தினார். பின்பு மைக் சரி செய்யப்பட்டு பேசத் துவங்கிய பொழுது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், ஓபிஎஸ் குறித்து பேச சொன்னதால் கோபம் அடைந்த டிடிவி தினகரன் வீணா போனவர்களை பற்றி பேச சொல்கிறீர்கள் என சற்று கோபப்பட்டு தொண்டர்களிடையே கடிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பரப்புரையில் டிடிவி தினகரன் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக கொடுத்த வாக்குறுதியை செய்யாததால் சென்னை போராட்ட களமாக மாறி உள்ளது.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யதுள்ளார், மீண்டும் தமிழ்நாட்டில் அம்மா அவர்களின் ஆட்சியை கொண்டுவர இபிஎஸ் தலைமையிலான ஆட்சிக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க கூறினார்.

இதையும் படிங்க: பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!

எனக்கும் இபிஎஸுக்கும் இருந்தது பங்காளி சண்டை என்றும், பங்காளிகளுக்குள் சண்டை நடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் அது முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறியதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளதாகவும் பணம், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேலை, டிரான்ஸ்பர் உள்ளிட்டவைகளை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வைத்ததோடு அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து அந்த பணம் ஒரே குடும்பத்திடம் போய் சேர்வதாக குற்றச்சாட்டு வைத்ததோடு ஒரு குடும்பத்திடம் சிக்கி உள்ள தமிழ்நாட்டை மீட்க குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என அங்கு கூடியிருந்த வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share