×
 

சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

நல்லாசிரியர் விருது பெரும் தமிழக ஆசிரியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இரு ஆசிரியர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் TTV தினகரன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரையில் உள்ள பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோர் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இந்த உயரிய விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சாதனையைப் பாராட்டிய டிடிவி தினகரன், , மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு இது பெரும் அங்கீகாரம் என்று குறிப்பிட்டார்.ஆசிரியர்கள் சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்குபவர்கள். அவர்களின் கற்பித்தல் முறைகளும், மாணவர் நலனில் கொண்ட உண்மையான அக்கறையும் தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.

இத்தகைய சிறப்பான பணியைத் தொடர்ந்து ஆற்றி வரும் தங்கராஜ் மற்றும் அமுதா ஆகியோரின் சேவைக்குக் கிடைத்துள்ள இந்த தேசிய விருது, தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். மாணவர்களை வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பவர்களாக அல்லாமல், வாழ்க்கைத் திறன்களையும், மதிப்புகளையும் வளர்ப்பவர்களாக ஆசிரியர்கள் செயல்படுவதையே இந்த விருது உணர்த்துகிறது.

இதையும் படிங்க: குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரின் கல்விப் பணியும் மேன்மேலும் சிறக்கட்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறினார். 

இதையும் படிங்க: குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share