×
 

சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

பழனியில் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகிய தகவலுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முருகனை தரிசிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அப்படியாக வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக விடுதிகள் இருக்கின்றன. தற்போது அந்த விடுதிகளில் கட்டண உயர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தினார். பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share