எது கொள்கை எதிரியா? மொதல்ல வெளிய வாங்க சார்..! விஜய்க்கு TTV தினகரன் பதிலடி..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சுக்கு TTV தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவை கொள்கை எதிரி எனக்கூறும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியில் வந்து அனைவரையும் சந்திக்க வேண்டும் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்டவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தற்போது ஆள்பவர்களும் பாஜகவிற்கு அடிமையாக தான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அதிமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் சரி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் சரி ஊழல் செய்யவே மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஒரு பைசா தொடமாட்டேன்., அது எனக்கு அவசியமே கிடையாது என்று கூறினார். அதுமட்டுமல்லாது பாஜகவை கொள்கை எதிரி என்றும் தொடர்ந்து கூறி வருகிறார் விஜய். இதுவரை திமுகவை சீண்டி வந்த விஜய், அதிமுகவை இந்த முறை கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனையில் திமுக நிர்வாகி கைது... கஞ்சா கடத்தல் மையம் தமிழ்நாடு..! TTV தினகரன் குற்றச்சாட்டு..!
எங்கள் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு எங்கள் கட்சியை ஊழல் கட்சி எனக் கூறுவதா என விஜய்க்கு TTV தினகரன் கேள்வி எழுப்பினார். தனது திரைப்படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதைக் கூட தடுக்க முடியாத விஜய் தான் ஊழல் பற்றி பேசுகிறார் என்று விமர்சித்தார். பாஜகவை கொள்கை எதிரி எனக்கூறும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியில் வந்து அனைவரையும் சந்திக்க வேண்டும் என TTV தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சும்மா தெறிக்குதுல்ல..! EPS பெயரை உச்சரித்த TTV..! அரங்கம் அதிர தொண்டர்கள் உற்சாகம்..!