வாழ்த்து சொன்ன இபிஎஸ்... கண்டுக்காத TTV..! பெயரைக் கூட குறிப்பிடாமல் கடந்து சென்ற சம்பவம்..!
எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொன்ன நிலையில், இபிஎஸ் பெயரை கூட குறிப்பிடாமல் டிடிவி தினகரன் கடந்து சென்றார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமைக்குப் பிறகு ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முடிவு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அரசியலை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.
அதே சமயம் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. தினகரன் தனியாக அமமுகவை தொடங்கி, எடப்பாடி பழனிச்சாமியை "துரோகி" என விமர்சித்து வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டது. அதன்பிறகும் தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை ஏற்க மாட்டேன் என பலமுறை அறிவித்திருந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட "எடப்பாடி இருக்கும் வரை என்.டி.ஏ.யில் இணைய மாட்டேன்" என தெளிவாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக பங்காளி பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். என் டி ஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!
ஆனால் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக nda கூட்டணிகள் இணைந்திருப்பதாக தெரிவித்தாரே தவிர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிட்டு பேசவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடியின் பெயரைக் கூட உச்சரிக்காமல் டிடிவி தினகரன் கடந்து சென்றது பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!