×
 

தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. 4 ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!

தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தூத்துக்குடியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நான்கு அதி முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு புரிந்துணர் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. தூத்துக்குடியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது 2 ஆயிரத்து 530 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 32 ஆயிரத்து 554 கோடி ரூபாய் முதலீட்டில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

இதையும் படிங்க: தமிழக தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்... முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய முதல்வர்!

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சந்திப்புகளை திமுக அரசு தொடர்ந்து நடத்தி வருவதாக கூறினார்.

சொன்னதை செய்வோம் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோள் என்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக தமிழ்நாட்டை மாற்றுவோம் என உறுதியளித்தார்.

மேலும் தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவு தற்போது நனவாக்கி வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி என்று கூறிய அவர், நான்கு ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மண்டலப்பிரிவு நெல்லையில் அமைக்கப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி மற்றும் நெல்லையில் முருங்கை ஏற்றுமதிக்காக 5.55 கோடியில் புது மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share