×
 

கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகி இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மதியழகன் கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து தவெக நிர்வாகி பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

இருவரையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிந்த பிறகு இருவரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: #BREAKING: செந்தில் பாலாஜி தான் காரணம்… LETTER எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட தவெக நிர்வாகி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share