விஜய்க்கு ஷாக்... பணத்தை டெபாசிட் பண்ணுங்க! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பிரச்சாரங்களின் போது இழப்பை தவிர்க்க டெபாசிட் செய்யும் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
ஆனால்,வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெறும் விஜயின் பிரச்சாரப் பயணம், மக்களிடையே ஆதரவைப் பெறுவதோடு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசின் அழுத்தத்தால் காவல்துறை இடையூறு செய்வதாக த.வெ.க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தினர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்றம் நிர்ணயத்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கிட வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: முதல்வரையே கேலி பண்ணுவீங்களா? STOP IT விஜய்! வைகோ காட்டம்
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சரமாரி கேள்வி முன் வைக்கப்பட்டது. நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவதுதானே என்றும் தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்றும் கேள்வி நீதிபதி எழுப்பினார்.
மேலும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் கூறினார். விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தவெக தொடர்ந்த வழக்கில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துகள் சேதமடைந்ததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதையும் படிங்க: சும்மா சும்மா நோண்டாதீங்க... நீதிமன்றத்தை நாடிய விஜய் தரப்பு!