×
 

புலி வேட்டைக்கு போகையில குறுக்க அணில் ஓடுது... TVK-வை கலாய்த்து தள்ளிய சீமான்

விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை அணில் என்று கிண்டல் அடித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை கிண்டல் அடித்து பேசினார். 

தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துவதாக கூறினார். அது தனக்கு தலைவிதி தலைவிதி என்று கேட்பதாக கிண்டல் அடித்தார். மேலும் மேலும் சரி எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் TVK TVK என்ன கத்துவதாகவும் டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்து இருக்கிறீர்கள் என்றும் சீமான் கிண்டல் அடித்தது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், புலி வேட்டைக்கு செல்லும்போது வழியில் அணில்கள் கோரி ஓடுவதாகவும் பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள் என்றும் தெரிவித்தார். அணிலே ஓரமாய் போய் விளையாடு., குறுக்கே வராது என்றும் அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் சீமான் பேசினார். 

இதையும் படிங்க: சீமானுக்கு என்ன ஆச்சு??... திடீர் ஆவேசத்தால் மொத்தமும் போச்சு... பகீர் கிளப்பும் வீடியோ...!

விஜயின் ரசிகர்களை அணில் என்று ஏற்கனவே இணையதளத்தில் பலர் கிண்டல் அடித்து வரும் நிலையில், சீமான் அணில் என்று பேசி இருப்பது தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே எரிச்சலை உண்டாக்கியுள்ளது. எங்களை அணில் என்று சீமான் கிண்டல் அடிப்பாரா என்றும் கடும் கோபத்தில் இருக்கின்றனர் தவெகவினர்…

இதையும் படிங்க: தரமான கல்வி கொடுக்க முடியல.. இதுதான் திராவிட மாடலா? திமுகவை வறுத்தெடுத்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share