தமிழகத்தில் 4 முனை போட்டி! தவெக தலைமையில் தான் கூட்டணி...! யாருக்கு பாதகம்?.
விஜய் தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 4 முனை போட்டியின் நிலவி வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 40 நாட்களுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் கோரச்சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் இது. தமிழக வெற்றி கழகத்தின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீனவர்கள் பிரச்சனை, கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை, கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல், வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் கூட்டணி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிமுகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டுவர தமிழக வெற்றி கழகத்தால் இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணியில் யார் யார் இணைய வாய்ப்பு உள்ளது என்ற கேள்வி எழுகிறது. கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் தவெக தலைமையிலான கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்றும் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வர் வேட்பாளர்… விஜய்க்கே முன்னுரிமை… தவெக பொதுக் குழுவில் தீர்மானம்..!
இளைய தலைமுறையின் வாக்குகளை விஜய் அள்ள வாய்ப்பு அதிகம் இருக்கும் நிலையில், மற்ற கட்சிகள் சில நெருக்கடிகளை சந்திக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. விஜய் தலைமையில் தான் கூட்டணி என்ற திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிகள் விஜய் கட்சி கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தமிழகத்தில் நான்குமுனை போட்டி நடக்கிறது.
இதையும் படிங்க: கரூர் கோரச்சம்பவம்… 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம்…!