×
 

கால் வெக்குற இடமெல்லாம் கன்னிவெடி! தவெகவுக்கு வேட்டு வெச்ச தூத்துக்குடி போலீஸ்

பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றி கழகத்தினருக்கு தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். 

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர். 

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய சுற்றுப்பயணம் பிரச்சாரத்தை காண்பதற்காக அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். அப்போது ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினருக்கு தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை பிடித்துள்ளனர். விஜய் தூத்துக்குடி வரும்போது தமிழக வெற்றி கழகத்தினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுமதி வழங்கப்படும் இடத்தில் தொண்டர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்து உள்ளது.

இதையும் படிங்க: விஜய் அதிமுகவுக்கு மாற்றா? சசிகலாவின் SUDDEN ரியாக்ஷன்!

திருச்சியை போல் தேவையில்லாத முறையில் நடந்து கொண்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மேலும், பிரச்சாரம் நடத்தப்படும் இடங்களில் ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெகவுக்கு அந்த தகுதியில்லை; விஜய்க்கு அதுக்கு அருகதை இல்ல.... கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share