நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகின்ற விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். மாற்று அரசியலுக்கான வழியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலர் இந்த கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் மையமாகக் கொண்டு இக்கட்சி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில், மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள இளையார் சுங்கச்சாவடி அருகேயுள்ள கூட கோவில் என்ற இடத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. மாநாடு 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான இடத்தைத் தேர்வு செய்ய ஆறு பேர் கொண்ட குழு பணியாற்றியது, மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடு தவெகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது. தவெகவின் முதல் மாநில மாநாடு 2024 இல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். 2வது மாநாடு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளையும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டங்களையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவித்தார். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும் என்றும் வெற்றி நிச்சயம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: என் உயிருக்கே ஆபத்து.. ஆதவ் அர்ஜுனா போலீசில் பரபரப்பு புகார்..!
இதையும் படிங்க: தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர் காமராஜர்.. தவெக தலைவர் விஜய் மரியாதை..!