×
 

அடுத்த TARGET..! தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் தவெக..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டுள்ளது..

தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தளபதி விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, தொடக்கத்தில் அரசியல் இயக்கமாக உருவான போதிலும், தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னெடுத்து, பாரம்பரிய தொழிற்சங்கங்களுடன் இணைந்து புதிய பாதையை உருவாக்கி வருகிறது. 

தவெகவுக்கு முன்பு தொழிற்சங்கப் பிரிவு இல்லாத நிலையில், சமீப காலமாக அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவெகவில் இணைவது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் சுமார் 100 நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். இதில் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் அடங்குவர். தவெக பொதுச் செயலர் ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. 

இதையும் படிங்க: சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

இந்த இணைப்புகள் தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சி அமைத்த பிறகு, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது சொந்த தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட இடங்களில் தவெக தொழிற்சங்கம் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share