×
 

#TNElectionResults2026..! சதமடித்தது TVK..! தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் வந்து தமிழக வெற்றிக்கழகம் சதம் அடித்துள்ளது.

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிட்டார். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் முடிவு, கட்சியின் தன்னம்பிக்கையை பிரதிபலித்தது. 

மக்கள் மத்தியில் த.வெ.க.க்கு ஏற்பட்டுள்ள ஆதரவு குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் இந்தக் கட்சியை வரவேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்று வருகிறது. நூறு தொகுதிகளுக்கு மேல் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றி கழகம் சதம் அடித்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் இந்த தேர்தல் புரட்சி அரசியலையே புரட்டி போட்டு இருக்கிறது. கூட்டம் வாக்குகளாக மாறாது என்று சொன்னவர்களுக்கு குட்டு வைப்பது போல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இருக்கிறது.

இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share