விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..! வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!
வேலூர் தொகுதி தவெக வேட்பாளர் வினோத் கண்ணா பரப்புரை செய்தார்.
வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத் கண்ணா, தீவிரமான பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவர் வேலூர் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, கட்சியின் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இளம் தலைமுறையைச் சேர்ந்த வினோத் கண்ணா, எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்து, குடியாத்தம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்ற பின்னணியுடன், மக்கள் மையப்படுத்திய அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்கிறார். பாரம்பரிய அரசியல் பின்னணி இல்லாத இவர், சமூக சேவை மூலம் மக்களிடம் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வினோத் கண்ணாவின் பரப்புரை மிகவும் தீவிரமாகவும், நேரடியாகவும் நடைபெறுகிறது. சார்பனாமேடு, சலவன்பேட்டை, முத்து மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மக்களிடம் நேரடியாக உரையாடி, கட்சியின் கொள்கைகளை எடுத்துரைக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு என்ன ஆச்சு??...விடிந்ததுமே தவெகவினர் தலையில் இறங்கிய பேரிடி... வெளியானது முக்கிய அறிவிப்பு...!
இந்த நிலையில், குறிப்பாக, தவெக தலைவர் விஜய் அவர்களின் ஆட்சி அமைந்தால் மூன்று மாதங்களுக்குள் வேலூர் தொகுதியின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையை வினோத் கண்ணா மக்களிடம் வலியுறுத்தி வருகிறார். “விஜய்யை ஆட்சியில் உக்கார வைங்க, மூன்று மாதத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் முடிச்சி கொடுக்குறோம்” என்று அவர் பரப்புரையில் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மருத்துவ மற்றும் கல்வி மையமாக இருப்பதால், அந்தத் துறைகளில் மேம்பாட்டை உறுதி செய்வதும் அவரது பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!