60 DAYS டைம் குடுங்க..! மாற்றம் வரும்..! அறநிலையத்துறை அமைச்சர் சர்ச்சைக்கு டாட் வைத்த ஆதவ்..!
60 நாட்கள் அவகாசம் கொடுங்கள்., நிச்சயமாக நிர்வாகத்தில் மாற்றம் வரும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திருவரங்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆன ரமேஷ் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது. அவருடைய சாதியை குறிப்பிட்டு அறநிலையத்துறை அவருக்கு அளிக்கப்பட்ட சம்பவத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது சாதிய மற்றும் குடும்பத்தின் மூலம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து இளைஞர் அமைச்சரவை உருவாக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சிகள் அவதூறு பிரச்சாரங்களை செய்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சமூகத்தில் இருந்த நபரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்திருப்பதாகவும், தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை எல்லோரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.
சாதிய அடிப்படையில் தேர்தலை தாங்கள் எதிர்கொண்டது இல்லை என்றும் அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உண்மையான சமூக நீதி நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடம் பிடித்தது குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார். திமுக ஆட்சியிலும் அதே நடைமுறையை தான் ஆளுநர் கடைப்பிடித்தார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!
உள்துறை செயலகத்தின் அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமை தாங்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் இரு மொழிக் கொள்கையில் தமிழக வெற்றி கழகம் உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். 60 நாட்கள் அவகாசம் கொடுத்தால் ஒரு மிகப்பெரிய நிர்வாகம் மாற்றத்தை பார்ப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!