LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!
விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சி.வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சி.வி. சண்முகம் உறுதி காட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வட தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது சி.வி சண்முகத்தின் தரப்பு கருத்தாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சியில் பங்கு என்பதில் சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கும் நிலையில் வேலுமணியும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்படுவதாகவும், ஆனால், கூட்டணி அமைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி என்ற நிலை கூட இல்லை என்பதால் ஆட்சியில் பங்கு பெற நிர்பந்திக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே அதிமுக சார்பில் நடைபெற இருந்து எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சி.வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். கடைசியாக ஒரு முறை விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்க இருப்பதாகவும், அப்படி மறுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்பதில் சிவி சண்முகம் உறுதியாக இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!