×
 

உடனே அந்த போட்டோக்கள நீக்குங்க.. விஜய்க்கு முன்பே முந்திக்கொண்டு உத்தரவு போட்ட என்.ஆனந்த்..!

தனது புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பிரச்சாரத்தில் விஜய் புகைப்படம் உள்ள ஸ்டிக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தனது புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என்ற பிரச்சாரத்தை தவெக முன்னெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீதி வீதியாக சென்று அவர்களுடைய ஆதரவை பெற்றதற்கு பிறகு, தவெகவிற்கு தான் தாங்கள் ஓட்டு போடுவோம் என தெரிவித்ததற்கு பிறகு அவர்கள் வீட்டு வாசலில்  தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. 

திமுக பாணியில் மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களில் இப்படி தவெகவினர் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். இதனிடையே தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை அழைத்து தனது புகைப்படத்தை நீக்க வேண்டும் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் முகமாக தலைவர் விஜய் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் ஸ்ட்ரிக்ட் ஆன உத்தரவாக பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: இதை முடிக்கலைன்னா அதிரடி ஆக்‌ஷன் பாயும் - தவெக நிர்வாகிகளுக்கு விஜய் எச்சரிக்கை!

மேலும் எங்கும் தன்னுடைய புகைப்படம் தலைவரோடு சேர்ந்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதோ அந்த இடத்தில் எல்லாம் அந்த ஸ்டிக்கர்களுக்கு மாற்றாக தலைவர் புகைப்படம் மட்டும் இருக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை  “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகம் இருக்கும் வகையில் மட்டுமே அச்சடித்து ஒட்ட வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் பழைய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதால், தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

இதையும் படிங்க: பாமக - தவெகவினர் இடையே மோதல் - போலீஸ் முன்பே கைகலப்பு - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share