×
 

நடுராத்திரியில தான் பர்மிஷன் கிடைக்குது..! இரவு நேர அறிவிப்புகள் குறித்து தவெக ஆனந்த் விளக்கம்..!

தமிழக வெற்றி கழக மாநில செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

விஜய் பரப்புரைக்கு சில நேரங்களில் அனுமதி கிடைப்பதில்லை. சில சமயங்களில் அனுமதித்தும் விஜயின் பரப்புரை ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் பரப்புரை தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைமை தங்களது அறிவிப்பை அவ்வப்போது வெளியிடும். அதுவும் இரவு நேரத்தில் வெளியிடப்படுவதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

நடு இரவில் எதற்காக இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்றும் அனுமதி தொடர்பாக முன்னதாகவே அறிவிக்கலாமே எனவும் பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை மூலம் இரவு நேரங்களில் விஜயின் பரப்புரை குறித்து அறிவிப்பு வெளியிடப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. நடு இரவில் தான் அனுமதி கிடைப்பதாகவும் அதனால்தான் அறிவிப்புகள் அப்போது வெளியாகிறது என்றும் தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் பலம் பொருந்திய வேட்பாளர்களை விஜய் களமிறக்கி உள்ளதாகவும் நிச்சயமாக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் எனவும் உறுதிப்படுத்த தெரிவித்தார். 

இதையும் படிங்க: முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share