×
 

#MYTVK... வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு எனும் செயலியை தொடங்கி வைத்த விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களை அரசியல் இயக்கத்தில் ஈடுபடுத்துவதற்காக உறுப்பினர் சேர்க்கை இலக்கை அமைத்துள்ளது. கட்சியின் நோக்கம், 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பதாகும். இந்த இலக்கை எளிதாகவும், திறமையாகவும் அடைய, தமிழக வெற்றிக் கழகம் ஒரு நவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியை உருவாக்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி, பயனர் நட்பு இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டு, எளிய முறையில் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள உதவுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி, கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை மட்டுமல்லாமல், கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, மற்றும் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து, பொறுப்புகளை ஒதுக்குவதற்கு இந்த செயலி ஒரு முக்கிய கருவியாக உள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்.. விஜயுடன் பேச்சுவார்த்தை..?

மேலும், இந்த செயலி, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், பொதுமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. இது, கட்சியின் நோக்கமான ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கொள்கையை மக்களிடையே பரப்புவதற்கு உதவுகிறது.

செயலியில் உறுப்பினர் சேர்க்கைக்கு க்யூஆர் கோடு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், தங்களது உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெறலாம். இந்த முறை, உறுப்பினர் சேர்க்கையை விரைவாகவும், எளிதாகவும் செய்கிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற செயலியை விஜய் வெளியிட்டார்.

சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூர் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் MY TVK எனும் செயலியை விஜய் வெளியிட்டுள்ளார். ஒரு செல்போன் எண்ணில் ஐந்து பேரை உறுப்பினராக்கும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையில் செயலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையில் விஜய் வழங்கினார்.

இதையும் படிங்க: எங்கள ஏன் கூப்பிடல? ஆத்திரத்தில் நிர்வாகிகள்.. தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share