"மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!
திருச்செங்கோடு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் நன்றி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்ற அருண்ராஜ், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நன்றி கூட்டத்தில், மக்களின் அரசியல் பக்குவத்தைப் பாராட்டிய அவர், தேர்தல் களத்தில் மக்கள் காட்டிய புத்திசாலித்தனத்தை சுட்டிக்காட்டினார்.
பேச்சின் தொடக்கத்தில் அமைச்சர் அருண்ராஜ், “ஒன்னும் முட்டாள் கிடையாது” என்று வலியுறுத்தினார். “சாதாரண பொதுமக்களோட அரசியல் அறிவை குறைத்து மதிப்பிடாதீங்க. முன்ன எப்படி இருந்தோம். இப்ப எப்படி இருக்கோம்னு மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க. ரூ.2,000, ரூ.1000 கொடுத்தவங்களை எல்லாம் விட்டுட்டு நமக்கு ஓட்டு போட்டிருக்காங்கன்னா அவங்கலாம் ஒன்னும் முட்டாள் கிடையாது. மக்கள் நம்ம கிட்ட பெரிய எதிர்பார்ப்பு வச்சிருக்காங்க.” என்றார்.
இந்தப் பேச்சு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பதவியைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலை செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் தவெகவுக்கு ஏற்பட்ட வெற்றியை மக்களின் தீர்மானமான தீர்ப்பாக அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!
முன்பிருந்த நிலையிலிருந்து இப்போது ஏற்பட்ட மாற்றத்தை மக்கள் உணர்ந்து, ஊழல் இல்லாத அரசை விரும்பி வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நன்றி கூட்டத்தின் போது அமைச்சர் அருண்ராஜ், தொகுதி மக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இந்த நன்றி சுற்றுப்பயணம் திருச்செங்கோடு மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!