×
 

எங்கேயோ இடிக்குதுங்க! அருண் ராஜ் ஒரு ஸ்பை.. பகீர் கிளப்பும் தகவல்கள்!!

அன்றைக்கு விஜய் வீட்டில் ரெய்டு போன அதிகாரியான அருண் ராஜ் இன்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி பெற்றுள்ளதால் பல்வேறு சந்தேகங்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ்க்கு வழங்கி கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று தன்னை விஜய் முன்னிலையில் அருண்ராஜ் தவெகவில் இணைத்துக்கொண்டார். தவெக மட்டும் தான் கொள்கை பிடிப்பு உள்ள கட்சி., மக்கள் பணி செய்ய இணைத்துள்ளேன்., மாற்றம் தேவை என எல்லாம் பேசினார் அருண் ராஜ். அதுமட்டும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி, அடிப்படை சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக நம் வெற்றித் தலைவர் ஏற்றிருக்கும் இந்த உன்னத பணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டனாக, உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன், எனது பயணத்தை தொடங்குகிறேன் என்று கூறி இருந்தார் அருண்ராஜ்.

தமிழக வெற்றி கழகத்தின் ஆரம்ப அமைப்பு பணிகளில் முக்கிய ஆலோசகராக செயல்பட்டதாக கூறப்படும் அருண்ராஜ் சமீபத்தில் தனது அரசு பணியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது அதிகாரப்பூர்வமாக அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்ஸ்!

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தான் அரசு அதிகாரியாக இருந்த போது விஜய் வீட்டில் ரெய்டுக்கு சென்றவரும் இதே அருண் ராஜ் தானாம். விஜய் வீட்டில் அவர் ரெய்டு நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இன்றைய கொள்கைப் பரப்பு செயலாளர் அன்று ரெய்டு நடத்திய அதிகாரி என்றும் இனி இவரது கண்காணிப்பு வளையத்தில் விஜய்யை வைக்கத்தான் தவெகவில் சேர சொன்னதா மேலிடம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share