×
 
☰

மதுராந்தகம் இடைத்தேர்தல்.. ஆரம்பிச்சுடலாமா..? வீரமணி வழக்கை மூடி வைத்தது யார்.? திமுகவை குறிவைத்த ஆதவ் அர்ஜுனா..!!

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்யை வரவேற்று அமைச்சர்ஆதவ் அர்ஜுனா பேசினார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பெரும் சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் காலியாகின.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் இந்த இரு தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தது. மதுராந்தகம் தனித் தொகுதியில் மரகதம் குமரவேல் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இந்தப் பின்னணியில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேரடியாக பரப்புரையில் இறங்கியுள்ளார். ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று இப்பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது முதலமைச்சரின் விஜயை வரவேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். 10 முதல் 12 கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் மகன் என அனைவரும் தோற்று விட்டார்கள் என்று தெரிவித்தார். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக அமைச்சர்கள் அத்தனை பேரை தோற்கச் செய்தது முதல்வர் விஜயின் பேச்சு என்றும் தெரிவித்தார். சமூக நீதிக்காக அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்ட கட்சி திமுக என்று குறிப்பிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஆதவ் அர்ஜுனாவிற்கு கை சுத்தமில்ல"..! தள்ளுபடி செய்யுங்க..! மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதில் மனு..!!

தமிழக வெற்றிக் கழகம் வீரமணி பற்றி பேசக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு பேரவையின் முதல்வர் விஜய் பேசியதாக தெரிவித்தார். எந்தவித விசாரணையும் நடத்தாமல் வழக்கை திமுக முடித்து வைத்ததாக தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டார். பெண்கள் மீது ஏற்படும் குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சொன்னது தமிழக வெற்றிக்கழக ஆட்சி என்று கூறினார். எடப்பாடி தொகுதியில் வேட்பாளரை விலைக்கு வாங்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share