சிபிஐ விசாரணை வளையத்தில் விஜயின் பிரச்சார வாகனம்... தடயவியல் துறை அதிகாரிகள் தீவிர சோதனை...!
விஜயின் பிரச்சார வாகனம் சிபிஐ விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: செம ஷாக்..! ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க பிறப்பித்த ஆணை ரத்து..!
சமீபத்தில் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. வரும் பன்னிரண்டாம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய்யின் பிரச்சார வாகனம் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்த விஜய்..! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!