×
 

நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்... வரும் 6 ஆம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு..!

தவெக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என கட்சி தலைவர் தலைமை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது என கூறப்பட்டு உள்ளது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: எனக்கு யாரும் எதிரி இல்ல.. விஜய் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பளீச் பதில்..!

பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம் என்றும் இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்றும் விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share