×
 

திமுக ஆட்சியை பற்றி தெரியாதா.? சந்தி சிரித்த சட்டம் ஒழுங்கு..! சீரமைக்கும் முதல்வர்... தவெக பெருமிதம்..!!

முதல்வர் விஜய் குறித்து தமிழக வெற்றிக் கழகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி, மாநில தலைநகரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க மாண்புமிகு முதலமைச்சர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளை இலக்கு வைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் தலைநகரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து கிடந்த நிலை அனைவரும் அறிந்த ஒன்று என்று கட்சி தெரிவித்துள்ளது. அந்தச் சீர்கேட்டை சரிசெய்யும் நோக்கில், பதவியேற்ற நாளிலிருந்தே முதலமைச்சர் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்புப் படை அமைத்தல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல், சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து கைது செய்தல் உள்ளிட்ட பல திட்டங்களை காவல்துறை மூலம் செயல்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையை சுதந்திரமாகவும் திறம்படவும் செயல்பட அனுமதித்து, குற்றங்களை வெறுமனே கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் முயற்சிகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருவதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, குற்றங்களை உளவியல் அடிப்படையில் அணுகும் முயற்சிகளையும் காவல்துறை வழியாக முன்னெடுத்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் இப்படியா?... உதயநிதி வெளியே வர,வர... தவெக தொண்டர்கள் செய்த காரியம்...!

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் எந்தவித சமரசமும் இருக்காது என்ற உறுதியுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருவதாக கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தலைநகரின் பாதுகாப்பை உயர்த்தவும் உதவும் என்று தமிழக வெற்றிக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இதையும் படிங்க: பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share