கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!
திரைப்படத் துறையில் பெரும் செல்வாக்கு கொண்ட ஏ.ஜி.எஸ் (AGS) நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஏ.ஜி.எஸ் (AGS) என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷ் அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒரே காரில் வந்து இறங்கியது அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர். காரில் இருந்து இருவரும் இறங்கி ஒன்றாகத் திருமண மேடைக்குச் சென்ற வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
'தி கோட்' (The GOAT) படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் விஜய் மிகவும் நெருக்கமான நட்பில் உள்ளார். அதேபோல், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு அவர் பங்கேற்கும் மிக முக்கியமான பொது நிகழ்ச்சி இதுவாகும். த்ரிஷாவுடன் அவர் பொது இடத்திற்கு ஒன்றாக வந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!
மேடையில் மணமக்களைச் சந்தித்த விஜய் மற்றும் த்ரிஷா, அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னர் கல்பாத்தி சகோதரர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இருவரும் தனி விமானத்தில் ஒன்றாகச் சென்றது ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது சென்னையில் ஒரே காரில் இவர்கள் வந்திருப்பது மீண்டும் ஒருமுறை #VijayTrisha என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளது.
இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..?? தவெக மும்முரம்..!!