×
 

கரூர் விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம்!! சிபிஐ விசாரணையில் பற்ற வைத்த விஜய்!! கசிந்தது புது தகவல்!

கரூர் துயர சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு சிலர் மீது சந்தேகம் இருப்பதாக விஜய் கூறியுள்ளார்.

டெல்லி: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் மீது கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (ஜனவரி 19, 2026) சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக விஜய் ஆஜரானார். காலை 10:30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4:40 மணி வரை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. இது அவரது இரண்டாவது விசாரணை (முதல் கட்டம் ஜனவரி 12-ஆம் தேதி நடந்தது).

சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கேட்ட முக்கிய கேள்விகள் மற்றும் அவரது பதில்கள்:

  • கரூர் துயர சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கருதுகிறீர்களா?
    விஜய்: சிலர் மீது சந்தேகம் உள்ளது. சந்தேகத்துக்குரிய நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
  • கூட்டத்துக்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்?
    விஜய்: குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு சென்று விட்டேன்.
  • உங்கள் கட்சியினர் சமூக வலைதளத்தில் "பகல் 12 மணிக்குள் கரூருக்கு வருவேன்" என்று பதிவிட்டது ஏன்?
    விஜய்: அது குறித்து எனக்கு தெரியாது. 
  • உங்கள் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது; கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதா?
    விஜய்: தெரியாது.
  • கூட்டத்தில் சிக்கி பரிதவித்தவர்களை மீட்காமல் அங்கிருந்து புறப்பட்டது மனிதாபிமானமா?
    விஜய்: அசம்பாவிதம் ஏற்படலாம் என்று போலீஸ் தரப்பில் "உடனே கிளம்பிச் செல்லுங்கள்" என்று கூறியதால் புறப்பட்டேன்.

பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது" என்று விஜய் பதிலளித்ததால், சிபிஐ அதிகாரிகள் மேலும் விசாரணை தேவை என்று முடிவு செய்துள்ளனர். த.வெ.க. நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் உள்ளிட்டோரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டுனாங்க!! சிபிஐயிடம் விஜய் கொடுத்த ஆதாரம்!! தவெகவினர் தகவல்!

அதேபோல் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, பாதுகாவலர் நயிம் மூசா, மேலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

கரூர் நிகழ்வு த.வெ.க.வின் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் என்னவாக இருக்கும்? த.வெ.க. மீது குற்றச்சாட்டுகள் உறுதியாகுமா? அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: இறுக்கமான முகத்துடன் சென்னை திரும்பிய விஜய்!! முடிந்தது முதற்கட்ட விசாரணை!! வெளியான முக்கிய தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share