×
 

தம்பியே வா! தலைமை ஏற்க வா... வாங்க விஜய் பாத்துக்கலாம்! ஆதவ் அர்ஜுனா ஃபயர் ஸ்பீச்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டு மேடையில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.

அப்போது, அண்ணாவுக்கு அடுத்து வந்தவர்கள் சமூக நீதிக் கொள்கையிலிருந்து விலகியதால் எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கியதாக ஆதார் அர்ஜுனா தெரிவித்தார். அண்ணாவின் கொள்கை மற்றும் அதை பின்பற்றிய எம்ஜிஆரை வணங்கும் வகையில் மாநாட்டின் பேனர் வைக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு முகப்பு வரவேற்பு பேனர்களில் அண்ணா எம்ஜிஆர் படங்களிடம் பெற்றது ஏன் என இந்த விளக்கத்தை அவர் கொடுத்தார். 

அண்ணாவின் கொள்கைகளை அடுத்து ஒருவர் கடைப்பிடித்துக் கொண்டு வர முடியும் என்றால் அது தலைவர் விஜய் ஆல் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளை உள்வாங்கி ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் அது விஜய்யால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அண்ணா கூறியதைப் போல் தம்பியே வா தலைமை ஏற்க வா என தலைவர் விஜயை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தடைகளை ஏற்படுத்தியதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: “குரான் மீது சத்தியமா பாஜகவுடன் கூட்டணி கிடையாது...” - அடித்துச் சொன்ன ஆதவ் அர்ஜுனா...!

இதையும் படிங்க: வேலை வெட்டி இல்ல போல! மீண்டும் மீண்டும் விஜயை சீண்டும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share