சாப்பாடு 70 ரூபாயாம்... என்னங்க அநியாயம்? கொந்தளித்த தவெக தொண்டர்கள்!
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் நிலையில், உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக அலைக்கடலென தொண்டர்கள் குவிந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி.
இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு ஆங்காங்கே உணவுகளும் ஸ்நாக்ஸ் பொருட்களும், தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தண்ணீர் உள்ளிட்டவை காலியாகின. கொளுத்தும் வெயிலால் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மூன்று பேர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை பணம் கொடுத்தும் வாங்குகின்றனர்.
இதையும் படிங்க: சீமான் ஒழிக...மதுரை மாநாட்டில் தொண்டர்கள் கோஷம்! பாரபத்தியில் பரபரப்பு
மாநாட்டின் சூழ்நிலையை புரிந்து கொண்ட வியாபாரிகள் அதிக விலைக்கு உணவுப்பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 கரண்டி உணவு 70 ரூபாய் என்றும் கூழ் 40 என விற்பதாகவும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கூறினர். அநியாயமாக விற்பனை செய்வதாக கொந்தளித்த தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் விற்பனை செய்பவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நீ அரியணை ஏறும் நாள் வரும்… வானமே எல்லை! விஜயின் தாயார் ஷோபா உருக்கம்