×
 

தவெக மதுரை மாநாடு! எத்தனை ஏற்பாடுகள் செய்கிறீர்கள்? காவல்துறை அடுக்கடுக்கான கேள்வி!

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு விவரங்களை மாவட்ட காவல்துறை கோரியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம், அதன் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த உள்ளது. மதுரை மாவட்டம், பாரப்பத்தி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக 506 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் பார்க்கிங் வசதிகளும் அடங்கும். கூடுதல் இடத்திற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த மாநாடு, தவெக-வின் முதல் மாநில மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெறுகிறது.

முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27, 2024 அன்று நடைபெற்று, லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஈர்த்தது. இரண்டாவது மாநாடு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 25, 2025 என்ற தேதி, குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இது விஜய்யின் திருமண நாள் (1999 ஆகஸ்ட் 25) மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. மேலும், மதுரை, விஜயகாந்தின் சொந்த ஊராக இருப்பதால், இந்த மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டை மாபெரும் அளவில் வெற்றி பெறச் செய்வதற்காக பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இந்த நிலையில் மாநாட்டின் விவரங்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம் உள்ளிட்டவை தொடர்பாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார், அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் கேட்டுள்ளனர். மாநாட்டு மேடைகளின் அளவு என்ன, நாற்காலிகளின் எண்ணிக்கை, பேனர்கள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டை போலவே இந்த மாநாட்டைக்கும் பல்வேறு கேள்விகளை காவல்துறை முன் வைத்துள்ளது.

இதையும் படிங்க: தன்னை கேலி செய்யும் தவெக.. கண்டுக்காத விஜய்.. கமிஷனர் ஆபிஸ் படியேறிய வைஷ்ணவி..!!

இதையும் படிங்க: தவெக மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம்! பரபரக்கும் சேலம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share