தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி கைது... என்ன காரணம் தெரியுமா?
கரூர் வழக்கில் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தவெக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே, த.வெ.கவின் தலைமை நிர்வாகிகள் என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விசாரணை அரசியல் ரீதியாகத் தங்களை இலக்காக்கும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறி, முதலில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், விசாரணை போலீஸ் துறையால் நடத்தப்படுவதால், அது நடுநிலையற்றதாக இருக்கும் என வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை நிராகரித்ததும், இருவரும் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!
இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கைது திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: விஜய் பாவம்யா... கூட விஸ்வாசிகள் இருந்திருந்தா… தாடி பாலாஜி சர்ச்சை கருத்து…!