இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...
அரசு பள்ளிக்கு சென்று முதலமைச்சர் விஜயின் படத்தை மாட்டி ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க மாவட்ட செயலாளரின் மகன் செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஏற்கனவே எச்சரித்தும், சில இடங்களில் இது போன்ற மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு வாகனங்களை தவெக நிர்வாகிகள் பயன்படுத்துவது போலவும், காவல் நிலையத்திற்குள் சென்று போலீஸாருடன் பேசுவதைப் படப் பாடல்களுடன் இணைத்தும், அரசு அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தை தூக்கி வீசிவிட்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய் போட்டோவை மாற்றுவது போலவும் ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
தற்போது தவெக நிர்வாகிகளைக் கடந்து அவர்களது உறவினர்கள் என்ற போர்வையில் தவெகவைச் சேர்ந்தவர்கள் அரசு பள்ளியில் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்சி மாவட்ட செயலாளராக இருப்பவர் சந்திரா. அவர் மாவட்ட செயலாளராக இருந்தாலும் அவருடைய மகன் செந்தில் தான் நிழல் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி உறையூர் பகுதி திருத்தாந்தோனியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்ற செந்தில் அங்கு வகுப்பறையில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாட்டி அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்யவே செல்வார்கள் ஆனால் த.வெ.க ஆட்சி அமைந்த பின்பு எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று அதை ரிலீஸ் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் அதே தவறு என பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில்
இதையும் படிங்க: "அரசியல் ஸ்டாண்ட் வேணாம்யா"..! அமைச்சர் நிர்மல் குமாரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!
அரசுத் துறையில் எந்த பொறுப்பும் இல்லாதவர் கட்சியிலும் எந்த பொறுப்பும் இல்லாத நபர் அத்துமீறி அரசு பள்ளிக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் விபச்சார தொழில் நடத்தியதாக செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெகவில் புகையும் உட்கட்சி பிரச்னைகள்! முட்டல், மோதல் அதிகரிப்பு! விஜய் டென்சன்!