“இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!
மாவட்ட செயலாளர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்வதாக கூறி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் அரசு மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் ரூ.,20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்டது. நடைபெற்ற தேர்தலில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேல்முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆனால் தவெக வேல்முருகன் நேற்று ஆளும் கட்சி அதிகார தோரனையுடன் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்துள்ளார். இதில் தவெக தொண்டர்களும் மாவட்ட செயலாளர் உடன் சென்றனர்.
ஆனால் மருத்துவ அலுவலர்களும், மருத்துவர்களும், மருத்துவமனை பணியாளர்களும் இவர் ஏன் மருத்துவமனையை ஆய்வு செய்கிறார். இவருக்கு ஆய்வு செய்ய என்ன அதிகாரம்இருக்கிறது என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?
இவருக்கு எந்த அதிகாரமுமில்லை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல் ஆகிவிட்டது தவெக ஆட்சி என வேதனையடைந்தனர். இந்த நிலையில் இதற்கு ஒரு படி மேல் சென்ற தவெக புள்ளிங்கோ வேல்முருகன் ஆய்வு செய்யும் வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவு செய்து அதற்கு விஜய்பட பி.ஜி.எம் போட்டு சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த அணைக்கட்டு தொகுதி மக்கள் பலரும் அதிகாரமுமில்லை வெற்றியும் பெறவில்லை இவர் யார் எதற்காக ஆய்வை செய்கிறார் என தங்களின் கருத்தை சமூக வளைதலங்களில் பதிவிட்டு வேல்முருகனை வறுத்தெடுத்து வருகின்றனர்
தவெக தலைமை கட்சி நிர்வாகிகள் யாரும் அரசு அலுவலகங்களிலோ அரசு இடங்களிலோ ஆய்வு என்ற பெயரிலோ கட்டபஞ்சாயத்துகளிலோ ஈடுபட கூடாது என தெரிவித்தும் அதற்கு எதிராக ஆய்வு என்று அரசு மருத்துவமனைக்குள் சென்ற வேல்முருகனின் செயல் அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சியையும் மக்களிடம் கெட்டபெயரையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் ஆங்காங்கே அரசு மருத்துவமனை ஆய்வு என்ற பெயரில் சென்று அட்டகாசம் செய்து வருகின்றனர் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இவரும் அதே போல் தானும் எம்எல்ஏ என நினைத்துக் கொண்டு ஆய்வு செய்து வருகிறாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தவெக வேட்பாளாரா நின்னு தோத்தவர் ........அரசு மருத்துவமனையில் செய்கிறார்....
— RAMJI (@RAMJIupdates) May 21, 2026
இதல விஜய் பட பிஜிஎம் வேற
இவர் தான் அனைக்கட்டு தொகுதியில் தவெக வேட்பாளரா நின்னு தோத்தவர்
தோல்வி அடைந்த தவெக
வேட்பாளர் வேல்முருகன் நேற்று அதிகார தோரனையுடன் அனைகட்டு அரசு மருத்துவமனைக்குள்… pic.twitter.com/H6FpO0elHx
இதையும் படிங்க: பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!