×
 

அரசியல் லாபத்திற்கு சட்டம் ஒழுங்கு பலிகடா... DMKவை சாடிய TVK...!

அரசியல் லாபத்திற்கு சட்டம் ஒழுங்கு பலிகடா ஆக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை திருமங்கலம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு, தூத்துக்குடியில் சிறுமிக்கு சிலம்ப பயிற்சியாளர் பாலியல் அத்துமீறல், தஞ்சாவூர் திருவிடைமருதூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை எனப் புத்தாண்டு தொடங்கிய ஒரே நாளில் இத்தனை பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாக மாறி வருவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. பெரும்பாலான குற்றங்களுக்குப் போதைப்பழக்கமே ஆணிவேராக உள்ளது என்றும் போதைக் கலாச்சாரத்தையும், பாலியல் குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே, இன்று பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறுவதற்குக் காரணமாகியுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. 

சுய லாபத்திற்காக விளம்பரம் தேடுவதிலேயே குறியாக இருக்கும் முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை துறையைக் கவனிக்கத் தவறியது ஏன் என்றும் ஏழு வயது சிறுமிக்குக்கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த 'விளம்பர மாடல்' ஆட்சி யாருக்கானது எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் 'போக்சோ' குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் எச்சரிப்பதாகவும், இத்தகைய வழக்குகளில் விரைவான தண்டனை பெற்றுத் தருவதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும் அரசு காட்டும் மெத்தனப் போக்கே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: சனாதன சக்தி துணையோடு திரிபுவாத அரசியல்... விஜயை மறைமுகமாக சாடிய திருமா...!

நிர்வாகம் என்பது வெறும் அறிக்கைகளிலும் விளம்பரங்களிலும் இல்லை என்றும் அது மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பில்தான் உள்ளதாகவும் கூறியுள்ளது. அரசியல் லாபங்களுக்காகச் சட்டம் ஒழுங்கைப் பலிகொடுப்பதை நிறுத்திவிட்டு, குற்றவாளிகள் நடுங்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: ஓடி ஒளிந்த அறிவாளிகள்... அதையெல்லாம் கண்டுக்காதீங்க... ஆதவ் அர்ஜுனாவுக்கு மா. சு. பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share