தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!
கொளத்தூர் தொகுதியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டது. மூன்று முறை இங்கிருந்து வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு அவருக்கு அதிர்ச்சி தோல்வியைத் தந்தார்.
இந்த வெற்றி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கொளத்தூர் தொகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு சுமார் 82,997 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த வெற்றி வித்தியாசம் சுமார் 8,000 வாக்குகளுக்கு மேல் இருந்தது. திமுகவின் பாரம்பரிய கோட்டையில் ஏற்பட்ட இந்த தோல்வி, கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உருவாக்கியது. பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், மாற்று அரசியல் தளத்தை நோக்கி திரும்பத் தொடங்கினர்.
இதையும் படிங்க: பிளவுபட்ட அதிமுக...! செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிமுக EX.MP ஐக்கியம்..!
இந்தச் சூழலில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில நாட்களில், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வு, தவெகவின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் வி.எஸ். பாபுவின் தலைமையில் தங்களை tvkவில் இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!