×
 

இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

தமிழக வெற்றி கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகப் பணி கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கியது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தொண்டர்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்ய இந்த விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நாளிலேயே பனையூர் தலைமை நிலைய அலுவலகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர். முதல் மனு கட்சித் தலைவர் விஜய் பெயரில் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் மனுக்களைப் பெற்றனர்.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் வழங்கப்பட்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக கட்சி தலைமை விரைவிலேயே முக்கிய முடிவு எடுத்தது.தலைமை அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக விருப்ப மனுவை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு அல்லது QR குறியீடு மூலம் மனு பெறும் வசதி செய்யப்பட்டது.

மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து, பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நேரிலோ, கொரியர் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தலைமை அலுவலகத்துக்கு அனுப்பலாம் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட கால அளவு பிப்ரவரி 6 முதல் 14 வரை என்றிருந்தாலும், தொண்டர்களின் ஆர்வத்தையும், சில இடங்களில் ஏற்பட்ட நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்சி தலைமை மேலும் சில நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

வரும் இருபதாம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தொண்டர்களின் கோரிக்கைக்கு இணங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நேரத்தை பயன்படுத்தி விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிகழ்வு தொண்டர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

ஏனெனில் பலர் விருப்ப மனுவை நிரப்பி தயாராக இருந்தாலும், சில தாமதங்கள் அல்லது தனிப்பட்ட காரணங்களால் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் இருந்திருக்கலாம். விருப்ப மனு சமர்ப்பிக்கும் போது பொதுத் தொகுதிக்கு 10,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 5,000 ரூபாயும் டிமாண்ட் டிராப்ட் வடிவில் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: திரிஷா பற்றி நைனாரின் அநாகரிக விமர்சனம்... அடிப்படை அறிவை இழந்துவிட்டார்.. நாஞ்சில் சம்பத் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share