அண்ணாமலைக்கு பதில் சொல்ல டைம் இல்ல… ஈரோட்டில் தவெக ஏற்பாடுகள் பிரம்மாண்டம்! – செங்கோட்டையன்
அண்ணாமலைக்கு பதில் சொல்ல நேரமில்லை. பொதுக்கூட்டத்திற்கு தயாராகும் பணியிலேயே நாங்கள் முழு கவனத்தைச் செலுத்தி வருகிறோம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலத்தில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட பொதுக்கூட்ட வளாகத்தைத் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து விரிவாகப் பேசினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்துச் செங்கோட்டையன் கூறுகையில், "மிகவும் குறுகிய காலமான நான்கே நாட்களில் எல்லோரும் ஏற்கும் வகையில் மிகச்சிறந்த முறையில் இந்த வளாகம் தயார் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு அழகாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லலாம். இந்தப் பணிகளை நிறைவேற்ற என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளன," எனத் தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதிச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் பட்டியலிட்டார், அவசரத் தேவைகளுக்காக 14 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 58 மருத்துவர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடுகளுடன் கூடுதலாக 10 லாரிகளில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்பக் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இதையும் படிங்க: 84 நிபந்தனைகள் ஏன்? இதுவரை இல்லாத கெடுபிடி! - ஈரோடு பொதுக்கூட்ட தேதி மாற்றம்: செங்கோட்டையன் ஆவேசம்!
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசுகையில், "கூட்டத்தை முழுமையாகக் கண்காணிக்கத் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வளாகத்தைச் சுற்றி 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறையினரின் கோரிக்கையின்படி உரிய உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக அமையும் வகையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்றார்.
மக்களிடையே நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், நிகழ்ச்சிக்கு வர பாஸ் அல்லது தேவையா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. தேவையா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. அப்படி எதுவும் தேவையில்லை; மக்கள் தாங்களாகவே முன்வந்து தலைவரைப் பார்த்துச் செல்லலாம். இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் யார் வேண்டுமானாலும் வரலாம்," எனத் தெளிவுபடுத்தினார்.
பாஜகவின் அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை. நாளை நடைபெறும் நிகழ்வைத் தயார் செய்யும் பணியிலேயே நாங்கள் முழு கவனத்தைச் செலுத்தி வருகிறோம்."அதிமுகவில் இருந்து யாராவது தவெக-வில் இணைகிறார்களா என்று கேட்கிறீர்கள். அதை இப்போது சொன்னால் பிரேக் பண்ணிவிடுவார்கள். ஒருவரைப் புதியதாகக் கழகத்தில் இணைக்கச் சில முறைகள் உள்ளன; தலைவர் கட்டளைப்படி அனைத்தும் நடக்கும்," என்று சுவாரஸ்யமாகப் பதிலளித்தார்.
ஊடகங்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் தங்களது கடமையைச் சிறப்பாகச் செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டு தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: ‘பேசணும்… கம்முனு இருக்கக் கூடாது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை