×
 

#BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் FREE..! பரந்தூர் பிளான் கை விட்டாச்சு..! பேரவையில் அதிரடி காட்டிய CM விஜய்.!

சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றம் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எரிவாயு சிலிண்டருக்கான தொகையை வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறினார். ஆண்டிற்கு மூன்று பிழையில்லை எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். வரும் பொங்கல் முதல் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றார். புதிய விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்றும் தெரிவித்தார். புதிய விமான நிலையம் அமைக்க சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் மலைகள் இல்லையா.? தமிழ்நாட்டு கனிம வளத்தை அழிக்கத் தான் ஆட்சிக்கு வந்தீங்களா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

மகளிர் கட்டணம் இல்லா பேருந்து திட்டத்தை விரிவு படுத்துவதாக முதல் வரிசை சட்டப்பேரவையில் அறிவித்தார். சாதாரண பேருந்து மட்டுமல்ல எக்ஸ்பிரஸ், எல் எஸ் எஸ் பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று தெரிவித்தார். அக்டோபர் இரண்டாம் தேதி முதல் வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம் என்றும் டீலக்ஸ் பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் பயணிக்கலாம் என்றும் அறிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share