×
 

பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

சமூக நீதியை குறிப்பிட்டு தவெக விமர்சனம் செய்துள்ளது.

திமுக தனது அரசியல் வரலாற்றில் “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை கொண்டு வந்ததாக தொடர்ந்து பெருமை பேசி வருகிறது. ஆனால் அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எத்தனை பேருக்கு உண்மையில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு திமுக பதில் அளிக்கவில்லை என்று தவெக கூறியுள்ளது. சட்டம் இயற்றியதாகக் கூறுவது மட்டும் போதாது, அதன் பலன் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் சென்றிருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ததாக திமுக கூறிவருவதையும் தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. சிலரை அமைச்சராக்கியதை சமூகநீதிக் கொள்கையாகக் காட்ட முடியாது என்றும், அது உண்மையான கொள்கை அடிப்படையிலான நடவடிக்கையா அல்லது பச்சாதாப அரசியலா என்ற கேள்வியை தவெக எழுப்பியுள்ளது. இதற்கு பதிலாக திமுக விளக்கம் அளிக்காமல் சத்தமிட்டு அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தனது ஆட்சியை முன்னிறுத்தி, சமூகநீதியை நடைமுறையில் செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள தவெக, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எட்டு பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளது. அதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

மேடைகளில் சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து பேசும் திமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்கீடு வழங்கவில்லை என்றும் தவெக தெரிவித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளை தேர்தலுக்காக பயன்படுத்திக் கொண்டு, பின்னர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அவர்களை புறக்கணிக்கும் அரசியலையே திமுக செய்து வருகிறது என்று அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் ரேஸில் முந்தும் முதல்வர் விஜய்! மோடி, ராகுலுக்கு அடுத்து 3-வது இடம்!! சி-வோட்டர் சர்வே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share