கோர்ட் ஓங்கி அடிச்சத மறந்துட்டீங்களோ..? "ENJOY" the consequences..! தவெக பதிலடி..!!
தமிழக வெற்றிக்கழக அரசு குறித்து விமர்சனம் செய்த திமுக விற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது என்றும் கூறியுள்ளது.
மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர் என்றும் ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் now they are enjoying the consequences என்று பதிலடி கொடுத்து உள்ளது.
இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல், இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி ஸ்டாலின் அறிக்கை விடுகிறார் என்றும் தெரிவித்துள்ளது. சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும் எனவும் கூறியது.
இதையும் படிங்க: பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!
அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர் எனவும் கூறப்பட்டுள்ளது. நீதிநெறி மறந்து அரசியல் Vending machine ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!