அரசு கொடுத்த சந்தனக் கட்டைகள்.! ஏற்க மறுத்த நாகூர் தர்கா நிர்வாகம்..! அரசியல் தலையிடா.? வெடிக்கும் சர்ச்சை..!!
கந்தூரி விழாவுக்கு அரசு வழங்கும் சந்தன கட்டைகளை வாங்க நாகூர் தர்கா நிர்வாகம் மறுத்துள்ளது.
நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்தப் புனிதத் தலத்தில், சாகுல் ஹமீது நாயகத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் சந்தனக்கூடு ஊர்வலமும், ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவமும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தச் சடங்கிற்காகத் தேவையான சந்தனக் கட்டைகளை தமிழக அரசு பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவது வழக்கம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கிய இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
பொதுவாக முதலமைச்சர் தர்கா நிர்வாகிகளிடம் நேரடியாக அரசாணையை வழங்கி, சந்தனக் கட்டைகளை ஒப்படைப்பது மரபாக இருந்து வருகிறது.இம்முறை கந்தூரி விழாவை முன்னிட்டு அரசு சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் இதில் பாரம்பரிய முறைக்கு மாறான ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டதாக தர்கா நிர்வாகம் கருதியது. வழக்கமாக தர்கா நிர்வாகத்தினரிடம் முதலமைச்சர் நேரடியாக வழங்கும் சந்தனக் கட்டைகள், இம்முறை நிர்வாகம் சாராத ஒருவரிடம் வழங்கப்படும் வகையில் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இது அரசியல் தலையீடாக அமைந்துவிட்டதாக தர்கா நிர்வாகம் கருதியது.
எனவே அரசு வழங்கும் சந்தனக் கட்டைகளை வாங்க மறுப்பு தெரிவித்தது. தர்கா நிர்வாகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது என்று பதில் அளித்தது. ஆன்மிக நிகழ்வுகளில் அரசியல் செல்வாக்கு செலுத்துவது விழாவின் புனிதத் தன்மையை பாதிக்கும் என்றும், பாரம்பரியத்தை மீறும் செயல் இது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். கந்தூரி விழா என்பது வெறும் சடங்கு அல்ல. பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஆன்மிக மரபு. அதில் அரசியல் கலப்பு ஏற்பட்டால் பக்தர்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதே அவர்களின் கருத்து.இந்த மறுப்பு அறிவிப்பு வெளியானதும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகூர் தர்கா போன்ற புனிதத் தலங்களில் அரசு உதவி வழங்கும் போது பாரம்பரிய முறையைப் பின்பற்றுவது அவசியம் என்ற கருத்து பல தரப்பினரிடையே எழுந்தது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை..!! தடையற்ற மருத்துவ சேவை..! முதல்வர் விஜயின் கறார் உத்தரவு..!!
அரசியல் தலையீடு இல்லாமல் பாரம்பரிய முறையில் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்க முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அரசு தரப்பிலிருந்து இன்னும் முழுமையான விளக்கம் வரவில்லை. இரு தரப்பினரும் உரையாடி ஒரு தீர்வை எட்டுவார்களா என்பது காலத்தின் கையில் உள்ளது. கந்தூரி விழாவின் புனிதத்தன்மை பாதிக்கப்படாமல், பக்தர்களின் நம்பிக்கை காக்கப்படும் வகையில் இந்த விவகாரம் தீர்க்கப்படுவதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் தொகுதி நிதி..! பாதாள சாக்கடை தூய்மைக்காக நவீன இயந்திரங்கள்..! CM போட்ட அதிரடி உத்தரவு..!!