×
 

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஜனவரி மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் இ.பரந்தாமனின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் வரும் ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய ஆட்சி கவிழும் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் தனது அதிகாரப்பூர்வ வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் அல்ல, தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார்; மு.க.ஸ்டாலினுக்கும் மதுராந்தகத்திற்கும் நீண்ட வரலாறு உள்ளது. மிசா வரலாறு முதன்முதலில் மதுராந்தகத்தில்தான் தொடங்கியது. இளம் வயதிலேயே திமுகவிற்காகச் சிறை சென்ற தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாக வரலாற்றைத் தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். மிசாவில் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காயங்களை மறைப்பதற்காக வழக்கமாக அணியும் அரைகைச் சட்டையை மாற்றி முழுக்கச் சட்டை அணிவித்து டெல்லிக்கு அழைத்துச் சென்றோம். நிச்சயமாக மதுராந்தகம் தொகுதியில் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், இடைத்தேர்தலில் திமுகவுக்கு இது கவுரவமான தேர்தலாகும். அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு தற்போது ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் இதற்காக எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மிசாவுக்காக சிறை சென்ற தலைவர் ஸ்டாலினைக் கொச்சைப்படுத்துகின்றனர். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் கட்சித் தொண்டர்கள் உழைக்க வேண்டும். சுவர்களில் வேட்பாளர் பெயர் எழுத பெயிண்ட் இல்லை என்றாலும் கரியை வைத்தாவது எழுதி பிரச்சாரத்தை முன்னெடுத்து, திமுகவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share