அரசியல் புரிதலோடு நகரணும்..! விஜய்யுடன் கூட்டணி..! மனம் திறந்த காங்கிரஸ் MP ஜோதிமணி..!
தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால திமுக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்தார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது., நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்., அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம் என்றார்.
இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் மு.க.ஸ்டாலினே தோல்வியடைந்திருக்கிற நிலையில் ,நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ,காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை கொடுத்த காங்கிரசார்..!!
காங்கிரஸ் கட்சியும். தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது. அதே போல எமது தலைவர் ராகுல்காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அரசியலில் ஏறகனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும்,புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும்,எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன் நகருவோம் என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: முறிந்தது திமுக உறவு..! தமிழக வெற்றி கழகத்திற்கே ஆதரவு..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!