விஜய் தோத்துடுவாரு..! பயத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!
விஜய் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
விஜய்யின் தீவிர ரசிகரான ஒரு இளைஞர், தன் நாயகன் தோற்றுவிடுவார் எனும் அச்சத்தில் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 33 வயது இளைஞர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை அருகே உள்ள கூட்டாத்தூர் கிராமத்தில் தன் மாமனார் வீட்டில் இருந்தபோது இந்தச் சம்பவம் அரங்கேறியது.
சுப்பரமணி என்பவரின் மகனான மகேந்திரன், விஜய்யின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர். தவெகவின் வெற்றியை உறுதியாக நம்பிய அவர், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக வெளியான சில வதந்திகள் மற்றும் ஊடகக் கணிப்புகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். “விஜய் தோற்றுவிடுவார்” என்ற பீதி இருந்துள்ளது. இந்த அதீத உணர்ச்சிகரமான நிலையில், மகேந்திரன் ஒரு கத்தியை எடுத்து தன் குரல்வளையை அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை..! இது ஆரம்பம்தான்..! பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை..!
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை உடனடியாக அருகிலிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது ICU-வில் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து நீங்காத நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தொண்டர்கள் மத்தியில் உள்ள உணர்ச்சிப் பெருக்கத்தை இது பிரதிபலிக்கிறது என்றாலும், அரசியல் வெற்றி-தோல்விகளை உயிருக்கு மேல் மதிப்பிடும் மனநிலை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!