"வாட் ப்ரோ.. வெரி ராங் ப்ரோ" - புதுச்சேரியில் உளறிக்கொட்டிய விஜய்... 7 நிமிட பேச்சில் இத்தனை குழப்பமா??
புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கரூர் துயர நிகழ்விற்குப் பிறகு 72 நாள் கழித்து மக்களுக்கிடையே பேசுகிறார் என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கப்பட்ட விஜயின் புதுச்சேரி மக்கள் சந்திப்பு சோசியல் மீடியாக்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பாண்டிச்சேரி அரசிடம் அனுமதி கேட்பது, முதல்வரைச் சென்று பார்ப்பது, எந்த இடம் என்று விவாதிப்பது என தவெகவினர் ஏகப்பட்ட பரபரப்பிற்கு இடையே ஏனாம் மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். எல்லாம் முடிந்து மைதானத்தில் மக்களையும் திரட்டி விட்டார்கள். அவர்களும் பேரார்வத்துடன் முட்டி மோதி உள்ளே புகுந்து குழுமி விட்டார்கள்.
முதலில் வந்ததும் மைக்கைப் பிடித்து 5 நிமிடம் பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் மேல் உங்களுக்குப் பாசம், விஜய்க்கு உங்கள் மேல் பாசம் என்றெல்லாம் கூறிவிட்டு விஜய்தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர், பாண்டிச்சேரியிலும் வெல்வார் என்றெல்லாம் கூறிவிட்டு முடித்துவிட்டார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அஞ்சலைக்கு 2 வருஷம் ஜெயில்... என்ன விஷயம் தெரியுமா?
அடுத்து வந்த ஆதவ் அர்ஜுனா செய்தது தான் காமெடியே, அவர் எம்.ஜி.ஆர் முதலில் பாண்டிச்சேரியில்தான் வென்றார் என்றார். பாண்டிச்சேரியின் பிரச்சினைகள் எதுவுமே தீர்க்கப்படவில்லை என்றார். அவர் எம்.ஜி.ஆரை பாராட்டுகிறாரா, விமர்சிக்கிறாரா என்று குழப்பமாக இருந்தது.
நடு நடுவே ஆதவ் அர்ஜுன் “சி,எம்.சார்” என்று சவால் விட்டார். ரங்கசாமிக்கு ஏன் அப்படி சவால் விடுகிறார் என்று குழம்பக்கூடாது. அவர் ஸ்டாலினைத்தான் சொன்னார். பாண்டிச்சேரியில் வேறு சி.எம். என்பது அவர் கவனத்தில் இல்லை.
அடுத்து விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் என்று இரண்டு கைகளையும் பறப்பதுபோல் விரித்தார். பிறகு புதுச்சேரி வேறு தமிழ்நாடு வேறல்ல என்றார். எல்லோரும் ஒரே மக்கள் என்றார். அப்படியானால் தமிழ்நாட்டுடன் இணைக்கச் சொல்லப்போகிறாரா என்று பார்த்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்றார். பின்னர் கையிலிருந்த பேப்பரைப் பார்த்து பாண்டிச்சேரியின் பிரச்சினைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டார். ஒன்றிய அரசு பாண்டிச்சேரிக்கு உதவ மறுக்கிறது என்றவர். ரங்கசாமி ஆட்சியை மட்டும் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து பேசினார்.
புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரியில் நின்று கொண்டு, தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து விளாசினார் விஜய். திடீரென்று தி.மு.க-வை நம்பாதீர்கள் என்றார். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் விஜய், திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார். அப்படியானால் புதுச்சேரிக்கு என தனி அரசியல் வேண்டாமா?, இங்கு மட்டும் ஆளும் கட்சியை புகழ்ந்து புகழ்ந்து பேசிகிறாரே? என குழம்பினர் மக்கள். தவெக பாண்டிச்சேரி தேர்தலில் போட்டியிடும் என்றார். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம் என்று முழுங்கினார். ஏழு நிமிடங்களில் பேச்சை முடித்துவிட்டார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவை விளாசிய விஜய், ஆளும் கட்சியை ஏன் விமர்சிக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இடையே மனக்கசப்பு நிலவுகிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக விஜய் திட்டமிட்டே இப்படி பேசியிருக்கிறார் என்கின்றனர் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: 2026 சட்டசபை தேர்தல்!! விஜய் டார்கெட் இந்த 3 தொகுதி தான்! வெளியானது டாப் சீக்ரெட்!