TVK...TVK... காற்றில் பறந்த விஜயின் அட்வைஸ்.. சொல் பேச்சை கேட்காமல் ரசிகர்கள் அலப்பறை..!
விஜயின் அட்வைஸை மதிக்காமல் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பெரும் அலப்பறை செய்ததால் போலீசார் திணறினர்.
இன்று மாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மதுரைக்கு வருகை தர உள்ளார். தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொள்வதால் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் கண்ணியத்தோடு இருக்க வேண்டும் என்று தனது தொண்டர்களுக்கு நேற்று கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருந்தார்.
ஆனால் மாலை 4 மணிக்கு வரும் விஜய்யை காண காலை 6:00 மணிக்கே விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக விமான நிலையத்திற்குள் நுழைய போலீசார் தடை விதித்தனர்.
இதையும் படிங்க: தவெகவினர் செயலால் கடும் மன உளைச்சலில் விஜய்... தொண்டர்களுக்கு அதிரடி அட்வைஸ்!
இந்த நிலையில் மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.TVK..TVK… என முழக்கங்களை எழுப்பி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளுடன் அத்துமீறினர். போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அலப்பறை செய்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இதனால் போலீசாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு சுய ஒழுக்க முக்கியம் என நேற்றுதான் விஜய் அட்வைஸ் செய்தார். அதனை துளிகூட மதிக்காமல் காற்றில் பறக்க விட்டு மீண்டும் அலப்பறை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!